திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 10 டிசம்பர் 2020 (17:12 IST)

அட்லி விஜய் சந்திப்பு நடந்தது ஏன்? இவ்ளோதானா காரணம்!

நடிகர் விஜய் சில நாட்களுக்கு முன்னர் அட்லியின் அலுவலகத்துக்கு சென்றது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தளபதி விஜய் நடித்த பிகில் படத்தை அடுத்து அட்லியின் அடுத்த படம் என்ன என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஷாருக்கான் படத்தை இயக்குவதாக கூறப்பட்டாலும் அந்த படம் குறித்த உறுதி செய்யப்பட்ட தகவல் எதுவும் இல்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் விஜய் அட்லியை அவரது அலுவலகத்தில் சென்று சந்தித்தார். இதனால் மீண்டும் அவர்கள் இருவரும் இணைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் அப்படி எதுவும் இல்லையாம். அட்லியின் மனைவியும் நடிகையுமான பிரியாவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளவே விஜய் அட்லி அலுவலகத்துக்கு சென்றாராம்.