செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 டிசம்பர் 2020 (10:45 IST)

பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி -கார்த்திக் சுப்பராஜை கழட்டிவிட்ட சன் பிக்சர்ஸ்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை முதல் காப்பி அடிப்படையில் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பதாக இருந்தார்.

சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படங்களாக அமைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய படங்களை இயக்கியவர் பொன்ராம். ஆனால் இவர்கள் கூட்டணியில் கடைசியில் உருவான சீமராஜா படம் தோல்வி அடைந்ததால் கூட்டணி ஒரு இடைவேளை எடுத்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில் சசிகுமார் நடிக்கும் எம் ஜி ஆர் மகன் என்ற படத்தை தயாரித்து இயக்கி முடித்துள்ளார் பொன்ராம். அதையடுத்து இப்போது விஜய் சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்துக்கு சன் பிக்சர்ஸ் நிதியளிக்க முதல் காப்பி அடிப்படையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனமே நேரடியாக தயாரிக்க உள்ளதாகவும், கார்த்திக் சுப்பராஜ் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்பது இன்னும் வெளியாகவில்லை.