செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (10:51 IST)

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

Jennifer Lopez

பிரபல ஆங்கில பாப் - பாடகியான ஜெனிபர் லோபஸ் கணவரை பிரிந்த சோகத்தில் மதுவுக்கு அடிமையாகி உள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

ஹாலிவுட்டில் பிரபலமான பாப் - பாடகியாக இருப்பவர் ஜெனிபர் லோபஸ். இவரது குரலுக்கு உலகமெங்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். வெறும் பாப் பாடகராக மட்டும் அல்லாமல் ஹாலிவுட்டில் பல படங்களிலும் ஜெனிபர் லோபஸ் நடித்துள்ளார். தற்போது 55 வயதாகும் ஜெனிபர் லோபஸ் இதுவரை 4 நபர்களை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துள்ளார்.

 

மூன்று முறை விவாகரத்து செய்த பின் நான்காவதாக பிரபல ஹாலிவுட் நடிகரான பென் அஃப்லெக்கை திருமணம் செய்தார் ஜெனிபர் லோபஸ். கடந்த 2022ம் ஆண்டு நடந்த இவர்கள் திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. தற்போது இந்த திருமண பந்தமும் விவாகரத்தில் வந்து நிற்கிறது.
 

 

விவாகரத்து குறித்த வழக்கில் கடந்த பல மாதங்களாக தானும், பென்னும் பிரிந்தே வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பென் அஃப்லெக்கை விவாகரத்து செய்யவும் ஜெனிபர்தான் முடிவை எடுத்துள்ளார். ஆனாலும் பென்னை பிரியப்போவதை நினைத்து சோகத்தில் ஆழ்ந்துள்ள ஜெனிபர் லோபஸ் அளவுக்கு மீறி மது அருந்தி வருகிறாராம். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

Edit by Prasanth.K