ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 18 பிப்ரவரி 2019 (22:31 IST)

ஐஸ்வர்யா தத்தா முன் முட்டி போட்டு கதறிய மகத்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது நெருக்கமாக இருந்த மகத், ஐஸ்வர்யா தத்தா, இருவரும் தற்போது ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா' என்ற இந்த படத்தில் இருவரும் காதலர்களாக நடிக்க இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபு இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது. முதல் காட்சியே ஐஸ்வர்யாவிடம் மகத் தனது காதலை புரபோஸ் செய்ய வேண்டும். ஐஸ்வர்யா முன் முட்டிபோட்டு ரோஜாப்பூவை அவர் கையில் கொடுத்து காதலை சொல்ல வேண்டும் என்பதுதான் ஷாட். ஆனால் இந்த ஷாட் சரியாக அமையாததால் ஏழெட்டு டேக் ஆனது. ஒவ்வொரு முறையும் மகத் முட்டி போட்டு முட்டி போட்டு காதலை சொல்ல, அவரது முட்டியே தேய்ந்து விட்டதாம். அதன்பின் ஒருவழியாக இந்த காட்சியை பின்னொரு நாள் எடுத்து கொள்ளலாம் என்று முடிவு செய்த இயக்குனர் வேறொரு காட்சியை படமாக்கினாராம்.

சென்னை செம்மொழி பூங்காவில் நடைபெற்ற இந்த படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த பலர் இதுகுறித்து டுவிட்டரில் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். நிஜத்தில் காதல் மன்னனாக இருக்கும் மகத், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்த மகத், சினிமாவில் காதலை புரபோஸ் செய்ய தெரியாதவராக இருக்கின்றாரே என்று பலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.