ஐஸ்வர்யா தத்தாவின் அடுத்த பட டைட்டில் இதுதான்

Last Modified திங்கள், 14 ஜனவரி 2019 (21:34 IST)
மகத்துடன் ஐஸ்வர்யா தத்தா ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் நடிகர் ஆரியுடன் ஐஸ்வர்யா தத்தா நடித்து வரும் படத்தின் டைட்டில் 'அலேகா' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ராஜமித்ரன் இந்த படத்தை இயக்கவுள்ளார். இவர் 'அய்யனார்' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகேஷ் இசையில் தில்ராஜ் ஒளிப்பதிவில் கார்த்திக் ராம் படத்தொகுப்பில் யுகபாரதி பாடல் வரிகளில் இந்த படம் உருவாகி வருகிறது.


தற்போது இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் படமாக்கப்பட்டவுள்ளது. இந்த படத்தை வரும் கோடைவிடுமுறையில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :