போஸ்டரிலும் காப்பி பேஸ்ட்: 'பிக்பாஸ்' மகத் படத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Last Modified திங்கள், 14 ஜனவரி 2019 (07:51 IST)
பிக்பாஸ் புகழ் மகத் முதல்முறையாக ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியானது

'கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா' என்ற டைட்டிலுன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை மகத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து தான் முதல்முதலாக ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்டரில் உள்ள பேக்ரவுண்டு அப்படியே விஷால் நடித்த 'கதகளி' படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றின் போஸ்டரில் இருந்து காப்பி எடுத்து பேஸ்ட் செய்யப்பட்டிருப்பதாக நெட்டிசன்கள் கலாயத்து வருகின்றனர். போஸ்டர் டிசைன் செய்பவர்களின் இந்த காப்பி பேஸ்ட் வேலையை நெட்டிசன்கள் தொடர்ந்து கலாய்த்து வருவதால் மகத் உள்பட படக்குழுவினர் பெரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :