கமல்ஹாசனை அடுத்து மம்முட்டி படத்தில் இணைந்த ஏஜண்ட் டீனா வசந்தி!
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் ஏஜண்ட் டீனா என்ற கேரக்டரில் அட்டகாசமாக நடித்தவர் நடிகை வசந்தி என்பது தெரிந்ததே
இவர் விக்ரம் படத்தில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விக்ரம் படத்தை அடுத்து மலையாள நடிகர் மம்முட்டி நடிக்கும் கிறிஸ்டோபர் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது. இந்த படத்திலும் இவர் அதிரடி ஆக்ஷன் கேரக்டரில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது
அதுமட்டுமின்றி நடிகை வசந்திக்கு தமிழில் மூன்று படங்களும் மலையாளத்தில் இரண்டு படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது