செவ்வாய், 9 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2022 (12:33 IST)

படம் ரொம்ப நீளம்.. ரசிகர்கள் புகார்! – கோப்ராவில் 20 நிமிட காட்சிகள் நீக்கம்!

விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள கோப்ரா படம் அதிக நேரம் ஓடுவதாக புகார் எழுந்த நிலையில் 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து நேற்று வெளியான படம் கோப்ரா. இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

நேற்று வெளியான இந்த படம் விக்ரமின் பல்வேறு கெட்டப்புகள், வியக்க வைக்கும் நடிப்புக்காக புகழப்பட்டாலும், அதேசமயம் கதை சுமாராகவே உள்ளதாகவும் மக்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். முக்கியமாக படம் 3 மணி நேரம் ஓடுவது ஜவ்வாக இழுத்தடிப்பது போல உள்ளதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து உடனடியாக செயலில் இறங்கிய படக்குழு படத்தில் தேவையற்ற 20 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளனர். பொதுமக்கள், ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நெகட்டிவ் கருத்துகளால் படத்திற்கு வரவேற்பு குறைந்துள்ள நிலையில் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது படத்தை விருவிருப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.