வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (09:20 IST)

முதல் நாளுக்குப் பிறகு படுத்த கோப்ரா வசூல்… வெளியான பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்  விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

விக்ரம் நடித்த ‘கோப்ரா’  திரைப்படம் வரும் 31-ஆம் தேதி ரிலீஸான நிலையில் மோசமான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்த நிலையில் 20 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெரும் பொருட்செலவில் உருவான கோப்ரா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. முதல் நாளில் சுமார் 7 முதல் 9 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.

ஆனால் அதற்கடுத்த நாட்களில் வசூல் சுத்தமாக படுத்துவிட்டதாம். இதனால் அடுத்தடுத்த நாட்களில் 3 கோடி ரூபாய் வசூலைக் கூட தாண்டவில்லை என சொல்லப்படுகிறது. முதல் 3 நாட்களில் சுமார் 13 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் படம் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.