பக்தி பழங்களாக மாறிய விஜய் ரசிகர்கள்!!
விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பிகில் திரைப்படம் வெற்றி பெற விஜய் ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டுள்ளனர்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்காக விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள பிகில் திரப்படம் வெற்றியடைய வேண்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறை, நாகை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரசன்ன மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விஜய் படம் வெற்றியடைய வேண்டியும், விஜய் நீடுழி வாழ வேண்டியும் அவர்கள் அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து வடக்கு மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் விஜய் ரசிகர்கள், கோயில் வளாகத்தில் தரையில் மண்சோறு சாப்பிட்டு பிரார்த்தன செய்தனர். இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.