செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 அக்டோபர் 2019 (21:57 IST)

’பிகில்’ கதை விவகார வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!

விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளி உள்ள நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் செல்வா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் 
 
இந்த வழக்கு விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையின்போது ’பிகில்’ படத்தின் இயக்குனர் அட்லி உள்பட படக்குழுவினர் படத்தின் மொத்த கதையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர் 
 
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ’பிகில்’ படத்துக்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பு நாளை மதியம் 2.15 மணிக்கு சென்னை நீதிமன்றம் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இந்த தீர்ப்பை பொறுத்தே வரும் வெள்ளியன்று ’பிகில்’ படம் வெளியாகுமா இல்லையா என்பது தெரியவரும். ஒருவேளை ’பிகில்’ படத்திற்கு தடை விதிக்கப்பட்டால் அந்த தடையை தகர்க்க ’பிகில்’ படக்குழு மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது