திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 டிசம்பர் 2020 (17:06 IST)

பல ஆண்டுகளுக்கு பிறகு உயிர்பெற்ற செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை!

இயக்குனர் செல்வராகவன் இயக்கி நீண்ட நாட்களாக முடங்கியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளதாம்.

செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் முடங்கிய பல படங்களில் இந்த படமும் ஒன்றாக அமைந்தது. அதன் பிறகு செல்வராகவன் இயக்கிய என் ஜி கே படம் ரிலீஸாகி படுதோல்வி அடைந்தது.

இதையடுத்து அவருக்கு எந்த ஹீரோவும் வாய்ப்புக் கொடுக்க முன்வராத நிலையில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் இப்போது நெஞ்சம் மறப்பதில்லை படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் தயாரிப்பாளர் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் டிஜிட்டல் உரிமைகளை விற்றுள்ளதாகவும், விநியோகஸ்தர்கள் சிலருக்கு படத்தை போட்டுக் காட்டி அவர்கள் பாராட்டியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் 2021 ஆம் ஆண்டு எப்படியும் இந்த படம் ரிலீஸாகி விடும் என சொல்லப்படுகிறது.