1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 11 டிசம்பர் 2020 (21:51 IST)

’’அயராத உழைப்பு, அபார திறமை...’’சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஓபிஎஸ்

நடிகர் ரஜினிகாந்த் நாளை தனது 70வது பிறந்தநாள் கொண்டாடவுள்ளார். இதையொட்டி தமிழகத் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வாழ்த்து டுவீட் பதிவிட்டுள்ளார்.

இருபது வருடங்களுக்கு மேலாகத் தன் அரசியல் வருகையை சஸ்பென்ஷாக வைத்திருந்த ரஜினிகாந்த், முதன்முதலாக கடந்த 2017 ஆம் ஆண்டு தனது ஆன்மீக அரசியலை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் கடந்த வாரம் தான் கட்சி ஆரம்பிக்கப் போவதாகத் தெரிவித்தார். அதன்படி அதற்கான வேலைகளையும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது,. அவரது கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அர்ஜூன் மூர்த்தியும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வாழ்த்து டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து #Superstar ஆக கோலோச்சி வரும் அன்புச்சகோதரர் @rajinikanth அவர்கள் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இது வைரலாகி வருகிறது.