1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2019 (13:53 IST)

இரு துருவங்கள் இணைந்தனர் : இளையராஜா - பாரதிராஜா சந்திப்பு !

தமிழ் சினிமாவில் இருபெரும் சாதனை ஜாம்பாவான்களாக கருதப்படுபவர்கள் இளையராஜா மற்றும் பாரதிராஜா. இவர்கள் இருவரும் நீண்ட காலமாக பேசாமல் இருந்த நிலையில் இன்று ஒருவரை ஒருவர்  சந்தித்துப்பேசி தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்.
அன்னக்கிளி என்ற  தமிழ்ப்படத்தில் தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக அறிமுகனார் இளையராஜா. அதுமுதற்கொண்டு அவரது இசைராஜ்ஜியம் கொடி கட்டிப் பறந்தது.

அப்போது கிராமத்து வாசனை திரைக்கதை அமைப்புடன் கிராமத்துக்கே சென்று ஷீட்டிங் நடத்தி ’பதினாறு வயதினிலே’ என்ற படத்தை எடுத்தார் பாரதிராஜா.அப்படத்திற்கு பாரதிராஜா இசையமைத்து எல்லா பாடல்களையும் வெற்றி பெற வைத்தார்.
 
இருவரது கூட்டணில் உருவான படங்களில்  இடம்பெற்ற இசை மற்றும் பாடல்கள் எல்லாம் காலத்தால் அழியாத காவியம். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடால் பிரிந்தனர்.
 
இந்நிலையில் நீண்ட காலம் பேசாமல் இருந்த இருவரும் இன்று திடீரென சந்தித்து அன்பையும், நட்பையும் பரிமாறிக்கொண்டனர்.
 
இருபெரும் ஜாம்பாவான்கள் சந்தித்துப் பேசிக்கொண்டது தமிழ்சினிமா ரசிகர்களையும் , சினிமா நட்சத்திரங்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
இருவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.