1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 25 அக்டோபர் 2019 (18:50 IST)

மிஸ்கின் ஸ்டைலில் மிரட்டும் "சைக்கோ" டீசர்!

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள "சைக்கோ" படத்தின் டீசர் சற்றுமுன் படக்குழு வெளியிட்டுள்ளது.


 
கண்ணனே கலைமான் படத்தை அடுத்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் மிஸ்கின் இயக்கத்தில் "சைக்கோ" படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நித்ய மேனன் நடித்துள்ள இப்படத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதாரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
க்ரைம் திரில் பாணியில் வெளிவந்துள்ள இந்த டீசரில் கொலையும் , ரத்தமுமாக காட்சிக்கொரு மரண திகில் கொடுக்கின்றது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.