வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Modified: புதன், 30 அக்டோபர் 2019 (16:27 IST)

வடிவேலு வசனத்தில் அட்லி செய்த டிக்டாக் : சமூக வலைதளங்களில் வைரல்...

இயக்குநர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் - நயன் தாரா நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் நல்ல வசூல் சாதனை செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் பிகில் படப்பிடிப்பின் போது, படக்குழுவினருடன் அட்லி செய்த டிக்டாக் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சில வருடங்களுக்கு முன்னர், நடிகர் விஜய், சூர்யா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான ஃபிரெண்ட் படம அனைவராலும் ரசிக்கப்பட்டது. அதில் வடிவேலு நேசமணி கதாப்பாத்திரமாகவே மாறியிருப்பார்.
இந்நிலையில், பகில் படத்தின் ஷூட்டிங்கின்போது, தனது படக்குழுவினருடன் சேர்ந்து, நேசமணி என்ற கதாப்பாத்திரத்தில் வடிவேலு பேசும் வசனத்தை அட்லி பேசுவது போன்ற வீடியோ தற்போது வைராலிவருகிறது.