திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 9 டிசம்பர் 2017 (22:01 IST)

நாளை சென்னையில் சன்னி லியோன் நடனம்

பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன் பாலிவுட்டில் அறிமுகமாகி முன்னணி ஹீரோயினாகவே மாறி விட்டார். கனடா  நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை சன்னி லியோன் தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படம் ஒன்றில் நடிக்க  ஒப்பந்தமாகியிருக்கிறார். நாளை அவர் சென்னையில் நடனம் ஆடுகிறார்.
சன்னி லியோனுக்கு தென் இந்தியாவிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏற்கனவே தமிழில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு ஆடிய வடகறி படத்தின் பாடலுக்கு குரல் கொடுத்தவர் ஆண்ட்ரியா தான். சமீபத்தில் கேரளாவில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தவரை பார்க்க கூடிய கூட்டம் நாட்டையே அதிர வைத்தது.
 
இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒண்று நடத்தும் பிரமாண்ட நட்சத்திர கலை நிகழ்ச்சி நாளை மாலை 6:30 மணிக்கு  பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடக்கிறது. இதில் சன்னி லியோன் கலந்து கொண்டு நடனம் ஆடுகிறார். இது  தவிர நடிகை ஆண்ட்ரியா நடத்தும் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சுஜித், மாதங்கி ஜெகதீஷ், நிகில், மாதவ், ரியானா ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பாடிகிறார்கள். நிகழ்ச்சியை தொகுப்பாளினி திவ்யா தொகுத்து வழங்குகிறார். முதல் முறையாக தமிழ்நாட்டில் நேரடியாக ரசிகர்கள் முன் நடனமாடுகிறார் சன்னி லியோன் என்பது குறிப்பிடத்தக்கது.