பாசத்துக்கு அளவில்லாமல் போச்சு! ரசிகர்களால் சூர்யாவுக்கு வந்த சோதனை!

VM| Last Updated: திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (11:26 IST)
அதிகப்படியான ரசிகர்கள் வருகையால் சூர்யாவின் என்ஜிகே படத்தின் படப்பிடிப்பு ஒரு நாள் முழுவதும் ரத்து செய்ய பட்டது. செல்வராகவனின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தின் ஷுட்டிங் ராஜாமுந்திரியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் NGK படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடைபெறுகிறது என்று இயக்குனர் செல்வராகவன் ட்விட்டரில் பதிவிட்டதிலிருந்து அங்குள்ள ரசிகர்கள் பலர்  சூர்யாவை காண படப்பிடிப்பு தளத்துக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
 
நேற்று சூர்யாவை காண படப்பிடிப்பு தளத்துக்கு ஒரே நேரத்தில் 5000திற்கும் மேற்ப்பட்ட ரசிகர்கள் குவிந்துவிட்டனர். கேரவனில் இருந்து வெளியே வந்த சூர்யாவை சூழ்ந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் சிக்கிய சூர்யா வெளியே வருவதற்குள் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.
 
அதனால் அன்றைய ஷூட்டிங் முழுவதும் ரத்து செய்யப்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :