1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 11 ஆகஸ்ட் 2018 (16:15 IST)

கேரளாவுக்கு ரூ.25 லட்சம் வெள்ள நிவாரணம் வழங்கிய சூர்யா, கார்த்தி

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருவதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது. 

 
பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்தும், பல வீடுகள் வெள்ளத்திலும் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
 
கனமழையின் காரணமாக கேரளாவில் உள்ள 24 அணைகள் நிரம்பிவிட்டன. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது. இதனால் 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
கேரளாவுக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் கார்த்தி, சூர்யா ஆகியோர் கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர்.