சூர்யா குறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்த இயக்குநர் செல்வராகவன்

Last Modified வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (16:18 IST)
நடிகர் சூர்யா, இயக்குநர் செல்வராகவனுடன் முதன்முறையாக இணைந்துள்ள படம் என்ஜிகே. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பை இயக்குநர் செல்வராகவன் வியந்து பாராட்டியுள்ளார்.
நடிகர் சூர்யா, இயக்குநர் செல்வராகவனுடன் முதன்முறையாக இணைந்துள்ள என்ஜிகே படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகை சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் ஈடுபட்டு வரும் நிலையில் சமீபத்தில் இப்படத்தின்  படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இயக்குநர் செல்வராகவனுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் தள்ளி வைக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும்  தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகர் சூர்யா குறித்து இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நான் ஒரு நடிகருடன் இணைந்து  மீண்டும் பணியாற்ற விரும்பினால் அந்த நடிகர் சூர்யா மட்டும் தான். அவருடைய அபாரமான ஆற்றல் கண்டு வியப்படைகிறேன். கடமையுணர்ச்சியும், கட்டுப்பாடும் இருந்தால் மட்டுமே தான் இது சாத்தியமாகும்” என்று பதிவிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :