ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜனவரி 2019 (13:28 IST)

துப்பாக்கி 2 படம் நிச்சயமாக வரும் - முருகதாஸ்

சென்னையில் ஒரு தனியார் இணையதள விருது வழங்கும் விழாவில்  இயக்குநர் முருகதாஸுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த சமூக பொறுப்பாளிக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய முருகதாஸ் சமூக பொறுபுணர்வு எல்லா இயகுநர்களுக்கும் இருக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 
மேலும் துப்பாக்கி 2 படம் எப்போது என்ற ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ’நிச்சயமாக துப்பாக்க்கி 2 படம் வெளிவரும்’என்றும், ஒரு மீம்மில் ’விஜய் சார் கூட நான் படம் பண்ணறதுதான் உங்களுக்கு பிரச்சனைன்னா ... இன்னும் 10 படம் கூட பண்ணுவேன் டா... ஸ்டைலா .. கெத்தா...’ என்ற வசனம் அதில் இருந்தன. அதற்கு பதிலளித்த முருகதாஸ் : ’இது என்னோட மைண்ட் வாய்ஸ் போல இருக்க்கிறதே என்றார்.’ அப்பொழுது அங்கு குழுமி இருந்த ரசிகர்கள் அனைவரும் ஆரவாரத்துடன் கரகோஷம் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.