திமுக ஆட்சிக்கு வந்தால் ... ’படிப்படியாக மது இல்லாத தமிழகம்’ - கனிமொழி

kanimozi
Last Modified சனி, 19 ஜனவரி 2019 (09:39 IST)
அடுத்த சட்டசபை தேர்தலில் திமுக வென்று ஆட்சிக்கு வந்தால் மது அருந்தும் மக்களை அதிலிருந்து மீட்டு பின்னர் படிப்படியாக மது இல்லாத தமிழகமாக மாற்ற எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும் என கனிமொழி எம்.பி  தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை கிராமத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவரிடம் இது பற்றி கேட்கப்பட்டது. 
 
அதற்கு அவர் கூறியதாவது :
 
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை  வசதிகள் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும்,  நிச்சமாக நிறைவேற்றப்படும் . முக்கியமாக மது இல்லாத தமிகம் உருவாக எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :