செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 16 ஜனவரி 2019 (21:38 IST)

வருமான வரி வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்த திட்டமா?

தற்போது ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் வரி கட்டி வரும் நிலையில் வரும் பிப்ரவரியில் தாக்கல் செய்யவுள்ள இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதன்படி இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி கட்ட தேவையில்லை என்ற நிலை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மருத்துவ செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவினங்களுக்கான வரி விலக்கு மீண்டும் கொண்டுவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நடுத்தர வர்க்கத்தினர்களின் வாக்குகளை கவர இந்த வருமான வரி வரம்பு உயர்த்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் நடுத்தர வர்க்கத்தினர்களை பாதிக்கும் ரயில் கட்டணம் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.