திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2017 (12:35 IST)

உயிரை காப்பாற்றியவருக்கு நன்றி தெரிவித்த கௌதம் மேனன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் கௌதம் மேனன்.  'மின்னலே', 'வாரணம் ஆயிரம்',  'விண்ணைத்தாண்டி வருவாயா', 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் கௌதம் மேனன் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு மாமல்லபுரத்தில் இருந்து செம்மஞ்சேரி வழியாக சென்னை வந்துகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே அவரது கார், டிப்பர் லாரியில் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், அவரது கார் பெரும் சேதம் அடைந்துள்ளது. கௌதம் மேனன் காயங்களுடன் நூலிழையில் உயிர் தப்பினார். உடனே அவரை தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.
 
இதனை தொடர்ந்து தனக்கு உதவிய எச்.சி.எல். நிறுவனத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் பற்றி கௌதம் மேனன் ட்விட்டரில்  உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அதில்,
இவ்வாறு ட்வீட் செய்துள்ளார் கௌதம் மேனன்.