செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 செப்டம்பர் 2020 (18:16 IST)

கமலின் ஆஸ்தான இயக்குனருக்கு கொரோனா… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கமலை வைத்து தமிழில் பல படங்களை இயக்கியவரான சிங்கிதம் சீனிவாசராவ் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்துள்ளார்.

கமலின் சலங்கை ஒலி, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் ஆகிய பல ஹிட் படங்களை இயக்கியவர் சிங்கிதம் சீனிவாசராவ். இவர் கமலுக்கு மிகவும் நெருக்கமான நண்பரும் ஆவார். கமல் தான் இயக்கிய மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் அவரை நடிக்க வைத்திருந்தார்.

இந்நிலையில் அவர் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்துள்ளார். தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூற பலரும் அழைக்கும் நிலையில் அதை எடுக்க முடியவில்லை என்றும் ‘எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் தான் உள்ளன. தற்போது வீட்டுத் தனிமையில் உள்ளேன். 22 ஆம் தேதி வரை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.