கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் பெயர் இதுதான் !

Sinoj| Last Updated: புதன், 16 செப்டம்பர் 2020 (15:29 IST)

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான
லோகேஷ் கனகராஜ், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியமாஸ்டர்திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று கடந்த சில மாதங்களாகவே வதந்திகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனராஜின் அடுத்த பட அறிவிப்புகள் எப்போது அவரது ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தனது அடுத்த பட அறிவிப்புகள் குறித்து நாளை ( இன்று ) மாலை தெரிவிப்பதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதனால் ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்த நிலையில் மேலும் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக விஷ்பரூபம் படத்தில் இடம்பெற்ற எனவென்று நினைத்தாய் என்ற பாடலே தற்போது கமல் – லோகேஷ் கனகராஜ் இணையும் படத்திற்குத் தலைப்பாக வைத்துள்ளதாக செய்திகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :