லோகேஷ் கனகராஜின் 6 மணி அறிவிப்பு இதுதான்! கமல் ரசிகர்கள் குஷி!

லோகேஷ் கனகராஜின் 6 மணி அறிவிப்பு இதுதான்! கமல் ரசிகர்கள் குஷி!
siva| Last Updated: புதன், 16 செப்டம்பர் 2020 (18:15 IST)
 
லோகேஷ் கனகராஜின் 6 மணி அறிவிப்பு இதுதான்! கமல் ரசிகர்கள் குஷி!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் சற்று முன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது அடுத்த படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளார். ‘எவனென்று நினைத்தால்’ என்று டைட்டிலில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார் என்பதும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்த படம் கமலஹாசனின் 232வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டவருக்கு நன்றி என்றும் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இதில் மேலும் படிக்கவும் :