முடிவே இல்லாத கதையின் டைட்டிலை தேர்வு செய்த விஜய்சேதுபதி

Last Modified புதன், 16 ஜனவரி 2019 (18:58 IST)
தினத்தந்தி நாளிதழில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வந்து கொண்டிருக்கும் படக்கதை 'சிந்துபாத். இந்த கதை எப்போது தொடங்கியது என்பதும், எப்போதும் முடியும் என்பதும் தினத்தந்தி ஊழியர்களே அறியாத ஒன்று

இந்த நிலையில் இந்த கதையின் 'சிந்துபாத்' என்ற டைட்டிலை விஜய்சேதுபதி தனது அடுத்த படத்திற்கு தேர்வு செய்துள்ளார். இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன் அவருடைய டூவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதி, அஞ்சலி நடிக்கும் இந்த படத்தை அருண்குமார் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த 'பண்ணையாரும் பத்மினியும்' மற்றும் 'சேதுபதி' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :