செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 ஜனவரி 2019 (07:36 IST)

பட்டிமன்ற பேச்சாளர் லியோனி மகனை அறிமுகம் செய்யும் பிரபல இயக்குனர்

பட்டிமன்ற பேச்சாளர் லியோனியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆரம்பகட்டத்தில் இவர் திரையுலகினர்களை கடுமையாக விமர்சனம் செய்தாலும், ஓரிரண்டு படங்களில் நடித்த பின்னர் திரையுலகினர்களை விமர்சனம் செய்வதை நிறுத்திவிட்டு அரசியல் பக்கம் தனது பேச்சை மாற்றினார். திமுகவின் விசுவாசிவான இவரது பேச்சு அனல் பறக்கும் வகையில் இருக்கும் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் லியோனியின் மகனும் தற்போது சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். விஜய்சேதுபதியின் 'மாமனிதன்' படத்தை இயக்கி வரும் சீனுராமசாமி இந்த படத்தில் லியோனி மகன் லியோ சிவகுமாருக்கு முக்கிய கேரக்டர் ஒன்றை கொடுத்துள்ளார். லியோனியின் மகன் என்பதற்காக இவரை தேர்வு செய்யவில்லை என்றும், முறைப்படி தங்கள் குழுவினர்களின் தேர்வில் தேறி இந்த படத்தில் அவர் இடம்பெற்றுள்ளதாகவும் சீனுராமசாமி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில் இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மீண்டும் காயத்ரி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.