பேட்ட பராக்!! டிவிட்டர் விமர்சனம்

rajni twitter
Last Updated: வியாழன், 10 ஜனவரி 2019 (10:21 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ,விஜய் சேதுபதி ,சிம்ரன், திரிஷா , பாபி சிம்ஹா ,சசிகுமார் நவாசுதீன் உள்பட பலர் நடித்துள்ள படம் பேட்ட.

சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.  ரஜினியின் மாஸ் இந்த படத்தில் மிக மிக சிறப்பாக இருப்பதாக வாழ்வியல் ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர். தனது அசாத்தியமான நடிப்பால் மொத்த படத்தையும் ரஜினிகாந்த் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்துவதாகவும ரசிகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
 
பேட்ட படத்தில் ரஜினிகாந்த் டான்ஸ் வேற லெவலில் இருப்பதாகவும்,  தங்கள் தலைவனை மாஸாக பார்க்க  உதவிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். 
 
மற்றோரு ரசிகர், பேட்ட படத்தின் 2ம் பாதி மிக விறுவிறுப்பாக இருப்பதாகவும், பொதுவாக பிளாஷ்பேக் காட்சிகள் படத்தை மெதுவாக செல்லவைக்கும். ஆனால் பேட்ட படத்தில் பிளாஷ் பேக்  படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது என பதிவிட்டுள்ளார். 
 
இன்னொரு ரசிகர், பேட்ட படத்தில் பாட்டு, திரைக்கதை என எல்லாமே சூப்பர். சிவாஜி படத்துக்கு பிறகு மிக விறுவிறுப்பான படத்தை பார்த்த உணர்வு இருந்தது என கருத்து தெரிவித்துள்ளார். இதேபோல் பல ரசிகர்கள் டுவிட்டரில் பேட்ட படம் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

11


12
1315
16

10
 
 


இதில் மேலும் படிக்கவும் :