திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2021 (10:52 IST)

கஷ்டப்பட்டு உடல் எடையைக் குறைத்த சிம்பு… இப்போது அதுவே பிரச்சனையா?

நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படப்பிடிப்பு நடத்துவதில் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது.

நீண்ட காலமாக தனது திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து திரைப்படங்களை நடித்து வருகிறார் சிம்பு. அவரது ஈஸ்வரன் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அடுத்த படமான மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் தனது அடுத்தப்படமான பத்து தல படத்தில் பிஸியாகியுள்ளார் சிம்பு. சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். முதன்முறையாக கௌதம் கார்த்திக், சிம்பு இணையும் படம் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்துக்கு மேலும் வலுவூட்டும் வகையில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த படத்துக்கான காட்சிகள் ஏற்கனவே கொஞ்சம் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இப்போது அந்த காட்சிகளை போட்டு பார்த்த இயக்குனர் கிருஷ்ணா ஏற்கனவே படமாக்கிய காட்சிகளில் சிம்பு குண்டாக இருப்பதாகவும், இப்போது மிகவும் ஒல்லியாக இருப்பதால் ஏற்கனவே எடுத்த காட்சிகளை பயன்படுத்த முடியாது என சொல்லிவிட்டாராம். இதனால் மீண்டும் பழைய காட்சிகளையும் புதிதாக படம் பிடிக்க வேண்டி இருப்பதால் தயாரிப்பாளருக்கு செலவு இரட்டிப்பு ஆக உள்ளதாம்.