செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 28 ஜனவரி 2021 (22:28 IST)

மீண்டும் கௌதம் மேனனுடன் கைகோர்த்த சிம்பு ! ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் சிம்பு, இன்று பிரபல தயாரிப்பு நிறுவனமாக வேல்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பு தற்போது வேல்ஸ் ஃபிலிம் இன்ஸ்டர்நேஷனல் தலைவர் ஐசரி கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் ஈஸ்வரன். இப்படத்தை இயக்குநர் சுசீந்தரன் இயக்கினார். இப்படம் வெறும் 35 நாட்களில் ஹூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டதை அனைவரும்  வியந்து பாராட்டினர்.

இந்நிலையில் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தேசிய விருது இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.#VelsFilmInternational #PositiveVibes #SilambarasanTR47 @IshariKGanesh pic.twitter.com/9m8MIMcvDl
 
இந்நிலையில், நடிகர் சிம்பு முதலில் படப்பிடிப்புக்குத் தாமதமாக வருவதாகப் புகார் கூறப்பட்ட நிலையில், இந்நிலையில் தற்போது அவர் ஆன்மீகத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர் முற்றிலும் மாறிவிட்டார்.

காலையில் 6 மணிக்கு ஹூட்டிங் என்றால் அதிகாலை 5 மணிக்கு செட்டுக்குச் சென்றுவிடுகிறாராம். சிம்புவின் இப்புதிய பழக்கத்தால் சினிமாத்துறையினர் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளார்.

சிம்புவுக்கு தற்போது இரண்டாவது இன்னிங்க்ஸ் என்பதால் அவர் ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து வைக்கிறார். இந்நிலையில் தற்போது வேல்ஸ் ஃபிலிம் இன்ஸ்டர்நேஷனல் தலைவர் ஐசரி கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில்  தான் தயாரிக்கவுள்ள அடுத்த படத்திற்கு சிம்புவை ஹீரோவாக ஒப்பந்தம் செய்துள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.

இப்படம் சிம்புவின் 47 வது படம் என்பதால் இப்படத்தை இயக்குநர் கௌதம் மேனம் இயக்கவுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். அநேகமாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2 ஆம் பாகமாக இருக்கலாம் என தகவல் வெளியாகிறது.

சிம்பு தொடர்ச்சியாக நிறைய படங்கள் வைத்திருப்பதால் இந்த வருடம் சிம்புவின் வருடம் என ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.