மீண்டும் இணைந்து நடிக்கும் சிம்பு, நயன்தாரா....தேசிய விருது இயக்குநரின் அடுத்த படம் !
நடிகர் சிம்புவும் நயன்தாராவும் இருவரும் இணைந்து, வல்லவன், இது நம்ம ஆளு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இணைந்து தேசிய விருது வென்ற இயக்குநர் ராமின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவகள் வெளியாகிறது.
நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகை நயன்தாரா சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் காத்து வாக்குல ரெண்டு காதல், மற்றும் நெற்றிக்கன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தேசிய விருது வென்ற இயக்குநர் இயக்குநர் ராமின் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இப்படத்தில் நடிகை நயன்தாராவும் நடிக்கவுள்ளதாகவும் விரையில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது.