செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 29 டிசம்பர் 2020 (11:23 IST)

தொடங்கியது ஓ மை கடவுளே தெலுங்கு ரீமேக் பணிகள்!

இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய பாராட்டுகளையும் வசூலையும் குவித்த ஓ மை கடவுளே இப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளிவந்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்  பின்னர் ஒடிடி தளத்தில் வெளியான போதும் மிகப்பரவலான கவனத்தைப் பெற்றது.  இந்த படத்தை பல திரையுலக பிரபலங்கள் பாராட்டினர். இளைஞர்களுக்கு மிகவும் பிடித்திருந்த இந்த படத்தை அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார்.

அசோக் செல்வனுடன் ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தை பற்றி அறிந்த தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான பிவிபி ரிலீஸுக்கு  முன்னரே இதன் ரீமேக் ரைட்ஸ்களை வாங்கியது. மேலும் அஷ்வந்த் மாரிமுத்துவையே இயக்கவும் ஒப்பந்தம் செய்தது. கொரோனா காரணமாக அதன் பணிகள் தாமதமானதால் இப்போது பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அசோக் செல்வன் நடித்த கதாபாத்திரத்தில் விஸ்வாக் சென் நடிக்க உள்ளார். மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.