செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2020 (09:45 IST)

’பத்து தல’ நாயகிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்: வைரலாகும் போஸ்டர்!

’பத்து தல’ நாயகிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்: வைரலாகும் போஸ்டர்
சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அவர் நடித்துவரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்துடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் சிம்புவின் அடுத்த படம் ’பத்து தல’ என்றும் இந்த படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கிறார் என்றும் இந்த படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார் என்பதையும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் பத்து தல திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ப்ரியா பவானிசங்கருக்கு இன்று பிறந்தநாளை அடுத்து அவருக்கு ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து, ‘பத்து தல’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது
 
இதனை அடுத்து பத்து தல படத்தில் பிரியா பவானிசங்கர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரியா பவானி சங்கரின் இந்த பிறந்தநாள் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது இந்த படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய பிரேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது