புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 12 ஜூன் 2021 (15:50 IST)

ரவிதேஜாவின் ரிலீஸாகாத படத்தின் ரீமேக்கில் சல்மான் கான்!

நடிகர் ரவிதேஜா நடிப்பில் உருவாகியுள்ள கிலாடி திரைப்படம் கொரோனா ஊரடங்கால் ரிலிஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் தென்னிந்திய இயக்குனர்கள் மற்றும் படங்களின் ரீமேக்குகளில்ந் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் ராதே படத்தின் படுதோல்வியில் அதிருப்தியான சல்மான் கான் மாஸ்டர் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. அதையடுத்து ரவிதேஜா நடிப்பில் ரிலிஸூக்குக் காத்திருக்கும் கிலாடி என்ற படத்தின் ரீமேக் உரிமையையும் வாங்கியுள்ளார். இந்த படம் மே 28 ஆம் தேதியே ரிலீஸாக இருந்தது. ஆனால் கொரோனா கால ஊரடங்கால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.