வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By

வீட்டுக்கு வெளியே படுத்திருந்த நாயைத் தூக்கிச் சென்ற சிறுத்தை… சிசிடிவி காட்சி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியிருப்புப் பகுதிக்கு வந்த சிறுத்தை ஒன்று நாயை தூக்கிச் செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

காடுகள் ஆக்கிரமிப்பால் வன விலங்குகள் தங்கள் வாழ்விடம், குடிநீர் மற்றும் உணவு ஆகியவை கிடைக்காமல் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது அதிகமாகியுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் புசே என்ற கிராமத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று ஒரு வீட்டின் அருகே படுத்திருந்த நாயை வாயில் கவ்வி தூக்கிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சி முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.