காலியான படுக்கைகள்... தமிழகத்தில் குறையும் கொரோனா!
கொரோனா 3 அலை வந்தாலும் அதனை எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, அரசின் கட்டமைப்பு முழு பலத்துடன் இருக்கிறது. கொரோனா 3 அலை வந்தாலும் அதனை எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் அளவு குறைந்து வருகிறது. 50 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.