ஆக்ஷன் கிங் அர்ஜுனை வைத்து இப்படி ஒரு படமா? 20 வருடங்களை கடந்த ரிதம்!
அர்ஜுன் மற்றும் மீனா ஆகியோர் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளியான ரிதம் திரைப்படம் 20 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமான படத்தில் இருந்து ஆக்ஷன் காட்சிகள் இல்லாத படத்தில் அவர் நடித்ததே இல்லை என்று சொல்லிவிடலாம். ஆனால் அந்த விதியை மீறி விதிவிலக்காக ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அப்படிப்பட்ட படம்தான் ரிதம்.
மென்மையான பத்திர்க்கையாளராக அர்ஜுனின் அசத்தலான நடிப்பில் முழுக்க முழுக்க காதல் காட்சிகள் நிரம்பிய ரிதம் திரைப்படம் இதே செப்டம்பர் மாதம் 2000 ஆம் ஆண்டு வெளியானது. ஏ ஆர் ரஹ்மானின் இசையில் வைரமுத்துவின் பாடல் வரிகள் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்கும் தன்மைக் கொண்டவை. இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் பஞ்ச பூதங்களை குறியீடாக கொண்டு உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.