கொரோனா பாதிப்பு எதிரொலி: முதல் போட்டியில் இருந்து வெளியேறிய சிஎஸ்கே வீரர்

13 பேருக்கும் கொரோனா இருக்குது:
siva| Last Updated: வியாழன், 17 செப்டம்பர் 2020 (14:15 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் தாமதமாக வரும் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது என்பது தெரிந்ததே

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் தொடங்க உள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளது என்பது சமீபத்தில் வெளியான அட்டவணையில் இருந்து தெரிய வந்தது

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு சில வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து சற்று முன் வெளியான தகவலின்படி தொற்று காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் இருந்து சென்னை அணியின் வீரர் ருத்துராஜ் கெய்வாட் என்பவர் விலகி இருப்பதாக தகவல்கள் வெளியேற்றுவது

முதல் போட்டியில் இருந்து விலகிய ருத்துராஜ் கெய்வாட்டுக்கு பதிலாக மாற்று வீரர்
யார் என்பதை கேப்டன் தோனி விரைவில் தேர்வு செய்வார் என்று கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஒருவர் கொரோனா காரணமாக போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :