வாய்ப்புக்காக ‘அப்படி’ செய்யவில்லை – ரகுல் ப்ரீத்சிங்
‘பட வாய்ப்புக்காக ‘அப்படி’ செய்யவில்லை’ என நடிகை ரகுல் ப்ரீத்சிங் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்துவரும் ரகுல் ப்ரீத்சிங், சமீபத்தில் ‘மேக்ஸிம்’ இதழின் அட்டைப் படத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார். இந்த விஷயம், தென்னிந்திய சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரகுல் ப்ரீத்சிங், “மேக்ஸிம் அட்டைப் படத்தில் வருவது என்பது நடிகையாகிய எனக்குக் கிடைத்த பெருமை. நடிகைகளும் உடலை எவ்வளவு பிட்டாக வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கான வாய்ப்பு இது.
தென்னிந்திய மொழிகளில் நடித்தபோது எனக்கு கிடைக்காத இந்த வாய்ப்பு, ஹிந்திப் படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்திருக்கிறது. தென்னிந்திய சினிமாவில்தான் இதைப் பெரிய விஷயமாகப் பார்க்கிறார்கள். பாலிவுட்டில் அப்படிப் பார்ப்பதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.