1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (14:06 IST)

15 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்த ஸ்பைடர் ட்ரெய்லர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்திருக்கும் படம் `ஸ்பைடர்'. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின்  அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்றிரவு 12 மணியளவில் வெளியாகி நல்ல  வரவேற்பைப் பெற்று வருகிறது.

 
மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பரத் ஆகிய இருவரும் மகேஷ்  பாபுவுக்கு சவாலான வில்லன்களாக நடித்திருக்கின்றனர்.
 
இன்று மாலை ஐதராபாத்தில் நடைபெறவுள்ள விழாவில் ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்ட நிலையில், நேற்றிரவு 11  மணிக்கே வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்தது. இதனால் நேற்று 11 மணியளவில் ஸ்பைடர் பட ட்ரெய்லர்  நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ட்ரெய்லர் 12  மணியளவில் யுடியூபில் வெளியானது.
 
தற்போதைய நிலவரப்படி தமிழ் ட்ரெய்லர் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும், தெலுங்கு ட்ரெய்லர் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் சென்றடைந்துள்ளது. தமிழை விட தெலுங்கு ட்ரெய்லரை மகேஷ் பாபுவின்  ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.