திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (12:17 IST)

புனித் ராஜ்குமாரின் கடைசிப் படம்! – “ஜேம்ஸ்” தமிழ் டீசர்!

பிரபல கன்னட நடிகரான மறைந்த புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ் படத்தின் தமிழ் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகர் புனித் ராஜ்குமார். புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறக்கும் முன்னதாக புனித் ராஜ்குமார் “ஜேம்ஸ்” என்ற படத்தில் நடித்து வந்தார்.

சேத்தன் குமார் இயக்கிய இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுவதும் முடிந்திருந்த நிலையில் புனித் ராஜ்குமார் உயிரிழந்தார். அதனால் இந்த படத்தின் ரிலீஸ் அவரது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியிடப்பட உள்ளது. தற்போது ஜேம்ஸ் படத்தின் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழி டீசரும் வெளியாகி ட்ரெண்டாகி வருகின்றன. இந்த படம் மார்ச் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.