எஃப்ஐஆர் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்! – இந்திய தேசிய லீக் புகார்!
இன்று வெளியாகும் எஃப்ஐஆர் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி புகார் அளித்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடித்து இன்று வெளியாகியுள்ள படம் எஃப்ஐஆர். இந்த படத்தில் இஸ்லாமியர்களை சர்ச்சைக்குரிய விதத்தில் காட்டியிருப்பதாக தடை கோரி இந்திய தேசிய லீக் கட்சி புகார் அளித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அக்கட்சியின் தலைவர் தடா ரஹீம், எஃப்ஐஆர் படத்தின் ட்ரெய்லரில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து காட்சி அமைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதால் இஸ்லாமிய இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர், உதயநிதி இந்த படத்தை தயாரித்திருப்பது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.