திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2017 (19:45 IST)

பிரபாஸ் கொடுத்த ரூ.75 லட்சம் நிதி: கார்த்தி கூறிய வெளிவராத ரகசியம்

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் 'பாகுபலி', 'பாகுபலி 2' படங்கள் மூலம் உலகப்புகழ் பெற்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்திற்காக பாகுபலி நாயகன் ரூ.75 லட்சம் நன்கொடை கொடுத்த விஷயம் தற்போது வெளிவந்துள்ளது.





'தீரன் அதிகாரம் ஒன்று' பட விழா ஒன்றில் நடிகரும், நடிகர் சங்க பொருளாளருமான கார்த்தி, இதுவரை வெளிவராத இந்த ரகசியத்தை வெளியிட்டார். கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தான் ஆரம்பித்த நிதியுதவி செய்யும் டிரஸ்ட்டுக்கு பிரபாஸ் ரூ.75 லட்சம் கொடுத்ததாகவும், அந்த பணம் முழுவதும் கடலூர் அரசு பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கி கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் அவர் கொடுத்த பணம் முழுவதும் எங்கெங்கு எதற்காக செலவு செய்யப்பட்டது என்ற கணக்கும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.