வரும் நடிகர் சங்க தேர்தல்லிலும் அதே அணி: கார்த்தி உறுதி

sivalingam| Last Updated: செவ்வாய், 21 நவம்பர் 2017 (19:44 IST)
கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் நடந்த நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார், ராதாரவி தோற்கடிக்கப்பட்டு, விஷாலின் பாண்டவர் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் அடுத்த தேர்தல் வரும் 2018ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகள் வரும் ஜனவரியில் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விட்டதை பிடிக்கும் மனநிலையில் வரும் நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார், ராதாரவி மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் வரும் நடிகர் சங்க தேர்தல்லிலும் அதே பாண்டவர் அணியை சார்ந்த நாங்கள் போட்டியிடுவோம் என்று இன்று நெல்லையில் நடிகர் சங்கபொருளாளர் கார்த்தி பேட்டி அளித்துள்ளார். அதே அணி அதே பதவிகளுக்காக மீண்டும் நேருக்கு நேர் மோதவுள்ளதால் வரும் நடிகர் சங்க தேர்தல் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :