Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வைரலாகும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் உண்மை குற்றவாளியின் புகைப்படம்


Sasikala| Last Updated: திங்கள், 20 நவம்பர் 2017 (19:05 IST)
‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்தி ஹீரோவாகவும், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். அபிமன்யூ சிங், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 
 
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடும் இந்தப் படத்துக்கு, ஜிப்ரான்  இசையமைத்துள்ளார். கார்த்தி நடிப்பில் தீரன் திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகின்றது. இப்படம் 1995-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
 
இதில் கொள்ளைக்கூட்ட தலைவன் ஓமாவாக ஒரு பாலிவுட் நடிகர் நடித்திருப்பார், இந்நிலையில் சமீபத்தில் இந்த வழக்கை எப்படி கையாண்டோம் என்று போலீசார் பேட்டியளித்தனர். இதை தொடர்ந்து ஓமா சிறையில் இருக்கும் போதே இறந்துவிட்டான் என்று கூறியதோடு அவர் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :