கூடிய சீக்கிரத்தில்.... "மாஸ்டர்" அப்டேட் வெளியிட்ட பட நிறுவனம்!
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி சென்று விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி மாஸ்டர் வெளியாகும் என நம்பகுந்த வட்டாரத்தில் செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில் தற்போது படத்தின் விநோயகஸ்தர் நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் " போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே கூடிய விரைவில் படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாக நிறைய வாய்ப்புகள் உள்ளது என நம்பப்படுகிறது. இந்த நிறுவனம் மேலும், கோப்ரா , காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களின் தற்போதைய நிலை குறித்து அப்டேட்டும் கொடுத்துள்ளனர்.