திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 22 மே 2020 (07:44 IST)

யாருக்கும் சம்பளம் இல்லை… புதுமுறையில் சினிமா தயாரிப்பு – முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி!

கொரோனா ஊரடங்கால் சினிமாத்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சத்யராஜை வைத்து கே எஸ் ரவிக்குமார் இயக்கும் படம் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட உள்ளது.

கொரோனாவால் சினிமா துறை கடந்த 2 மாதங்களுக்கு மேல் முடங்கியுள்ளது. இதனால் வரும் காலங்களில் சினிமா தயாரிப்பு முறைகளில் பெரிய மாற்றம் வரும் என சொல்லப்படுகிறது. அதை மெய்ப்பிக்கும் விதமாக விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமன்யம் மற்றும் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி ஆகியோர் கூட்டணியில் 2 கோடி ரூபாய் செலவில் புதிய படம் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது.

இந்தப் படத்தை இயக்குபவர் கே.எஸ்.ரவிக்குமார். நாயகன் சத்யராஜ். கதையில் முக்கியமான சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் பங்குபெறும் யாருக்கும் சம்பளம் என்று கிடையாது. முதலில் போட்ட பட்ஜெட்டில் படத்தை முடித்துவிட்டு ரிலீஸுக்கு பின் வரும் பணத்தில் அவரவரின் சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு  ஒரு தொகை அளிக்கப்படும். மேலும் படத்தின் பட்ஜெட்டான 2 கோடியையும் 200 பங்குகளாகப் பிரித்து விற்பனை செய்ய உள்ளனராம். அதன் மூலம் ஒருவர் அதிகபட்சமாக 10 பங்குகளை வாங்கிக்கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.