திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (15:54 IST)

'அருவி'யில் நடிக்க மறுத்த நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிஹாசன்: ஏன் தெரியுமா?

100 வருட தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு ஒரு சினிமாதான் அனைத்து தரப்பினர்களையும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு படம் வருவதுண்டு. 100% விரும்பத்தக்க சினிமா என்ற வகையில் சமீபத்தில் வெளிவந்த அருவி' பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதுவரை இந்த படத்திற்கு யாரும் நெகட்டிவ் விமர்சனம் கொடுக்கவில்லை

இந்த நிலையில் இந்த படத்தில் ஆதித்யாபாலன் நடித்த 'அருவி' கேரக்டரில் நடிக்க முதலில் இயக்குனர் அணுகியது நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிஹாசன் ஆகிய மூன்று முன்னணி நடிகைகளைத்தானாம். ஆனால் மூவருமே இந்த படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தாலும், கால்ஷீட் பிரச்சனையினால் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்தின் கடைசி அரை மணி நேரக்காட்சிக்காக மெலிந்த உடல் தோற்றத்திற்காக மாறவும் மேற்கண்ட மூன்று நடிகைகளும் யோசித்ததாக கூறப்படுகிறது. இந்த மூவரில் ஒருவர் இந்த படத்தில் நடித்திருந்தால் இந்த படத்தின் ரிசல்ட்டே வேற லெவல் என்பது குறிப்பிடத்தக்கது.